×

வளமான வாழ்க்கை தரும் வராஹி… எதிரிகள் தொல்லை நீங்கும் வராஹி…

கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை. வராஹி என்ற பெயர் கேட்டாலே பலருக்கும் பயம் வரும். சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஒரு அம்பிகை பஞ்சமி தாயாக விளங்கும் வராஹி ஆவாள். பல்வேறு பஞ்சங்களையும், கஷ்டங்களையும் துரத்தி வாழ்வில் வரலாறு படைக்க வைப்பவள் வராஹி.

பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். சப்த மாதர்களில் வாராஹியும் ஒருவர். அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி என்று பக்தர்களால் போற்றப்படுகிறார் .பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வதோடு தீயசக்திகளை அடித்து விரட்டுவாள்.

வராஹி தேவி
அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் சப்த கன்னிகள். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராஹ்மி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் வராஹி.

வெற்றிவாகை சூடிய வராஹி
வராஹி மனித உடலும், வராஹ முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும், ஆதரவிலும் மழைக்கு நிகரானவள் இவள். இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.

அஷ்ட வராஹிகள்
சேனநாதா, தண்டநாதா, வராஹி, பஞ்சமி, கைவல்யரூபி, வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி (நீதி தேவதை – ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, மகாசேனா, அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீயாகும். ஸ்வப்ன வராஹி, அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி, லகு வராஹி, உன்மத்த வராஹி, லகு வராஹி, மஹிஷாரூட வராஹி, சிம்ஹாரூட வராஹி என அஷ்ட வராஹிகளாக அழைக்கப்படுகின்றனர்.

வராஹி ஆயுதங்கள்
பல வண்ண உடைகள் அணிபவள் ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு, மஞ்சள் உடையாகும், ஏர் கலப்பை, தண்டம், வராஹி அமைந்துள்ள முக்கிய இடங்கள் நெல்லை, தஞ்சை, திருவானைக்காவல், காசி போன்றவை சிறப்பு மிக்க தலங்கள்.

எதிரிகள் தொல்லை நீங்கும்
குண்டலினி சக்தியை அளித்து நம்முடைய வாழ்வாதாரத்தை உயர்த்துபவள் வராஹி. அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம் முப்பிறவி கர்ம்மாக்களை அழித்து நம்மை காப்பவள். நாம் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற செய்பவள். வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், துர்தேவதைகள் அண்டாது. வாழ்வில் வெற்றி அனைத்தும் கிடைக்கும். நல்லெண்ணங்களும், நன்னடத்தையையும் கொண்டவர்களுக்கு அகிலம் அனைத்தையும் காக்கும் பராசக்தி தேவி அனைத்தையும் வழங்கி நல்லருள்புரிகிறாள்.

தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். மேலும் எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வாராகி அம்மனின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும்.

The post வளமான வாழ்க்கை தரும் வராஹி… எதிரிகள் தொல்லை நீங்கும் வராஹி… appeared first on Dinakaran.

Tags : Varahi ,Ambika ,Shiva Shakti ,Varahi… ,
× RELATED வேதாரண்யம் அருகே வாராஹிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம்